வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

எம்பிலிபிட்டிய, கொடிகந்த பகுதியில் இரும்புத் தடியால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொடிகந்த, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

 

குறித்த நபருக்கும் மேலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, இரும்புத் தடியால் தாக்கி இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment