3 நாட்களாகக் காணாமல் போயிருந்த நபரின் சடலம் வயல்வெளியில் மீட்பு

 

வெல்லாவெளி, சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள வயல் நிலமொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் கடந்த 08 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தவர் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு உயிரிழந்தவர் சின்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment