வெள்ளை அழகிக்கு இலங்கை மசாஜ் நிலையம் ஒன்றில் நேர்ந்த சித்திரவதை

 

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப் பெண் ஒருவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.

 இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குறித்த மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் 38 வயதுடைய ஒருவராவார்.

 

கடந்த 6ஆம் திகதி உனவட்டுனவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வைத்து, சிகிச்சையளிப்பதாகக் கூறி சந்தேக நபர் இந்தப் பெண்னைத் துன்புறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இச்சம்பவம் தொடர்பாக இன்று சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பணியகம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment