மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அத்தோடு இடியுடன் கூடிய மழையின் போது குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
