இன்று மே 15, 2026 வைகாசி மாதம் 01ம் தேதி வெள்ளி கிழமை, மேஷ ராசியில் ரேவதி, அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளில் இரண்டிரண்டு கிரக சேர்க்கை நடக்கின்றன. புதாதித்ய மற்றும் லட்சுமி நாராயண யோகம் உருவாகும் நாள். இன்று கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மாத சிவராத்திரி தினம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தொழில், வியாபாரத்தை முன்னேற்ற எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைத் தரும். குறிப்பாக நீங்கள் ஏதேனும் வங்கி அல்லது நிறுவனத்திடம் கடன் வாங்க முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்பு உண்டு. பழைய நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு ஆதரவும், அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.இன்று உங்கள் மனைவியிடம் இருந்து எதிர்பார்த்த அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். உங்கள் காதல் வாழ்வில் இப்போது ரொமான்ஸ் பொங்கிப் பிரகாசிக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை அல்லது தொழில் தொடங்க அதிகமாக அலைச்சல் ஏற்படும். உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுடைய எந்த ஒரு நிலுவையில் உள்ள பணிகளையும் திட்டமிட்டால் சரியாக நிறைவேற்ற முடியும். நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.இன்று உங்களுடைய குடும்பத்தை பராமரிப்பதிலும், காதல் தொடர்பான விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சலும், உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் சமூக நடவடிக்கைகள் சற்று பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் எதிர்பாராத ஆதாயங்களை பெறுவீர்கள். இன்று ஆன்மீகத்தின் மீது உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளிடமிருந்து ஊக்கம் அளிக்கக் கூடிய செய்திகளை பெறுவீர்கள். இன்று இசை, நடிப்பு என கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாளுக்காக சந்திக்க நினைத்த நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவு தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் பிள்ளைகள் மீதான நம்பிக்கை வலுவடையும். தாய் வழி சொந்தங்கள் மூலமாக அன்பும் சிறப்பான ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் பெற்றோரை சிறப்பாக கவனித்து கொள்ளவும். இன்றைய சிலரின் ஆலோசனை உங்களுடைய கடின சூழலை எதிர்கொள்ள உதவும். இன்று திருமணம், குழந்தை பேறு என சில நல்ல செய்திகள் தேடி வரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் நிறைந்த நாள். இன்று உங்களுடைய மனம் அமைதியற்றதாகவும், சோகம் மற்றும் செயல்பாடுகளில் கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்றைய பெற்றோரின் அன்பும் ஆதரவும் பெறுவீர்கள். இன்று உறவுகளை அனுசரித்து செல்வது அவசியம். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த ஆதாயம் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் மனதளவில் அச்சம் இன்றி உணர்கிறீர்கள். கடினமான பணிகள் தைரியமாக முடிக்க முடியும். இன்று உங்களுக்கு சில உடல் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு எதிர்பார்த்த விதத்தில் கிடைக்காது. இன்று உங்களுடைய கருத்துக்களை பிறர்களிடம் திணிக்க வேண்டாம் வியாபாரத்தில் நிதி நிலையில் முன்னேற்றமும், ஆதாயத்தையும் பெறுவீர்கள். இன்று ஆரோக்கியம் உங்களுக்கு கை கொடுக்கும் சுறுசுறுப்பாக உணருவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு மங்களகரமான நாளாக இருக்கும். நீங்கள் மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவீர்கள். சமூக பணிகளை முழு மனதுடன் செய்வீர்கள். இன்று உங்களுடைய வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்க கூடிய முயற்சிகள் மங்களகரமான பலனை பெரும். இன்று உங்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உங்களுடைய குடும்ப செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று பணியிடத்தில் நல்லிணக்கத்தை பேணுவது அவசியம். மாலை நேரத்தில் சில சங்கடமான சூழல் ஏற்படலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் மனம் அமைதியற்று, கலக்கத்துடன் இருக்கும். உன்னுடைய தொழிலை விரிவு படுத்துவதற்காக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகும். இன்று உங்களின் பொறுமை மற்றும் சாமர்த்தியதால் எதிரிகளை தோற்கடிக்க முடியும். வேலை நல்லது குடும்பத்தில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை தவிர்த்து நிதானமாக செயல்படவும். இன்று உங்களுடைய வெற்றி வாய்ப்பு அதிகம். உங்கள் செயல்பாடுகளில் ஏற்று இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்களுடைய ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் கற்றல், அறிவுத்திறன் மற்றும் ஞானம் அதிகரிக்கும். உங்களுடைய தர்ம சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொள்வீர்கள். உங்களுடைய நிதி நிலைமை வலுவுடைய கூடிய நாள். இன்று வயிறு தொடர்பாக சில தொந்தரவுகள் ஏற்படும். உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் மனம் நிலையற்ற தன்மையை கொண்டிருக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த பட்ஜெட் போட்டு செயல்படவும். உங்களுடைய நிதிநிலைமையை படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று, மதிப்புமிக்க பொருட்களை வாங்கும்போது கவனமாகவும், தேவையற்ற பொருட்களை தவிர்ப்பதும் அவசியம். இன்று உங்களுடைய செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்கும். உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் நிலுவையில் உள்ள பணிகளை சரியாக முடிக்க முடியும். உங்களுடைய வேலை மற்றும் நிதி நிலையை சரியாக பராமரிக்கும் விஷயத்தில் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும். இன்று சூரிய பகவானின் மாற்றம் பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு சந்தானம் பாக்கியம் உண்டாகும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு செயலையும் கவனமாக செய்யவும். இன்று நீங்கள் ஞானத்துடனும், விவேகத்துடனும் புதிய விஷயங்களை ஆராய்வதில் செலவிடப்படும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு வரக்கூடிய வருமான வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும். உலக இன்பங்களை அனுபவிக்க அதிக செலவிடுவீர்கள். இன்று நீங்கள் சில பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் வேலையாக இருந்தாலும், காதல் விஷயமாக இருந்தாலும் முன் முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று, சுகஸ்தானத்தில் ராசி அதிபதி குரு இருப்பது, நீண்ட காலமாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இன்று மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். சமூகத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வேடிக்கையாக, மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை வேகமாக முடிக்க முடியும். முக்கிய வேலைகளை முன்னுரிமை கொடுத்து முடிக்கவும்.
