11 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 28ஆம் திகதி ஹங்குராங்கெத்த காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட, பகுதியில் பெருந்தோட்டம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதைக் கவனித்த தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அவரை உடனடியாகப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த காவல்துறைப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
