இலங்கை பேரூந்து ஒன்றில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை

இலங்கை பேரூந்து ஒன்றில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை

பேருந்தில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை  நேற்று கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

கடந்த 20ம் திகதி பொலன்னறுவையில்  இருந்து கல்முனை நோக்கி தனியார் பேருந்தில் 14 வயது சிறுமி அவரது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வதற்காக பயணித்துள்ளார்.

அதேவேளை புனாணை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு சென்று திரும்பியவர், அதே பேருந்தில் ஏறி சிறுமிக்கு அருகில்  அமர்ந்துள்ளார்.

பேருந்து மன்னம்பிட்டியை தாண்டி சென்று கொண்டிருந்தபோது குறித்த இராணுவ சிப்பாய் சிறுமி மீது பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட நிலையில்,

சிறுமி அருகில் இருந்த சிறிய தந்தையிடம்  முறையிட்டதையடுத்து அவர் அந்த இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதனையடுத்து பேருந்து சாரதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று நிறுத்தி பேருந்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்ததையடுத்து,

பொலிசார் தாக்குதலுக்குள்ளான இராணுவ சிப்பாயை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் நோய் குணமாகி வைத்தியசாலையில் இருந்து நேற்று  மாலை வெளியேற முற்பட்டபோது அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *