பணத்தகராறு கொலையில் முடிந்தது

பணத்தகராறு கொலையில் முடிந்தது

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தெட்டுகல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த குறித்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வெல்லவ பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் இடையில் நிலவிய பணத்தகராறு முற்றியதே இந்த கொலைக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *