ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் ஜோடுகுல பாலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்களுடன் அனைவரும் அடிக்கடி மது விருந்தில் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் ஒரு தங்கும் விடுதியில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்தனர். நள்ளிரவு வரை மது குடித்ததால் மது போதை தலைக்கு ஏறியது.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் முகத்தில் செருப்பால் தாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அறையில் உள்ள மின்விசிறியில் குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அப்போது சாந்தகுமாரியின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு போன் செய்து வலிப்பு நோய் ஏற்பட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர்

மகள் இறந்து விட்டதை அறிந்த அவர்கள் அலறி அடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் தனது மகளை மது போதையில் அடித்துக் கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடுவதாக குற்றம் சாட்டினர்.

இதேபோல் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் பொலிஸார் நண்பர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *