திருமலையை உலுக்கிய பேரூந்து விபத்து 20 பேருக்கு நேர்ந்த சோகம்

திருமலையை உலுக்கிய பேரூந்து விபத்து 20 பேருக்கு நேர்ந்த சோகம்

மூதூர் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று கிண்ணியா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு கங்கை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் மூதூர் மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *