யாழை சோகத்தில் ஆழ்த்திய தந்தை-மகன் உயிரிழப்பு-வெளியான தகவல்கள்

யாழை சோகத்தில் ஆழ்த்திய தந்தை-மகன் உயிரிழப்பு-வெளியான தகவல்கள்

நேற்று முன் தினம் (21) இரவு உறவினரை வைத்தியசாலையில் பார்த்துவிட்டுத் திரும்பிய தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரைப் பார்வையிடுவதற்காகத் தந்தையும் மகனும் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் இரவு வேளையில் திருநெல்வேலியிலிருந்து பலாலி நோக்கி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது உரும்பிராய் சந்தியில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பட்டா ரக வாகனம் மோதியுள்ளது. இவ்விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. விபத்தில் பலியானவர்கள் 64 வயதுடைய தந்தையும், 23 வயதுடைய மகனும் ஏழாலை கிழக்கு, ஏழாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சடலங்கள் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *