சக்தி வாய்ந்த அமிர்த யோகம்-இன்றைய ராசிபலன்{23.4.2026}

சக்தி வாய்ந்த அமிர்த யோகம்-இன்றைய ராசிபலன்{23.4.2026}

இன்று ஏப்ரல் 23, 2026 வியாழன்கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 10ம் தேதி, மிதுன, கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் குரு – சந்திரன் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். இன்று விருச்சிகம் ராசியில் உள்ள அனுஷம் பின்பு கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்களைப் பார்த்து சக ஊழியர்கள் பொறாமை பட வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் மன அமைதியே காண்பீர்கள். இன்று தர்ம காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்களின் நிதானம் மற்றும் நிலையான செயல்பாடு உங்கள் மனதை அமைதி படுத்த முடியும். உங்கள் மனைவியின் உடல் நலம் தொடர்பாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் நலம் தொடர்பான செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று அதிர்ஷ்டமான நாளாகவும்., நல்ல செய்திகள் கிடைக்கக் கூடியதாக இருக்கும். இன்று உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட காலமாக எதிர்பார்த்த விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைகிறீர்கள். இன்று நீங்கள் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் பணி அழுத்தம் எதிர் கொள்ள வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய நிலைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நல்ல பலனை தரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தந்தையின் ஆசிர்வாதம், ஆலோசனை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக நீங்கள் மதிப்பும் மிக்க பொருளை அல்லது சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். இன்று நீங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு வேலையையும் சரியாக முடிக்க முடியும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். இன்று உங்களுடைய மன உறுதி அதிகரிக்கும். எந்த விதமான ஊக அல்லது அபாயகரமான முதலீடுகளை தவிர்க்கவும். இன்று உங்களுடைய நிதிநிலை கவனமாக திட்டமிடவும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு மற்றும் சந்திரனின் சேர்க்கை காரணமாக உங்களுக்கு திடீரென பெரிய அளவில் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். வணிக திட்டங்கள் வேகம் அடையும். உங்கள் செயல்பாடு கௌரவத்தை தரக்கூடியதாக இருக்கும். அவசரத்தில், உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பது வருத்தத்தை ஏற்படுத்தக்கூடும். வழிபாடு, கோயிலுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நிதிநிலை தொடர்பாக அபாயகரமான முடிவுகளை தெரிவிக்கவும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதும், சக ஊழியர்களுடன் மோதலை தவிர்ப்பதும் நல்லது.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் களத்தில் நீங்கள் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெறுவீர்கள். உங்களுக்கு வெற்றி தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்ற போராடுவீர்கள். உங்களுடைய தடைபட்ட வேலைகள் முடிவடையும். செரிமானம் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் இன்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று கூறியவர்களே சந்திப்பதால் மகிழ்ச்சியாக நேரம் கழியும். உங்களுடைய உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. உங்களுடைய வேலை அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை கையாள வேண்டியது இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி நேரடி பார்வை காரணமாக உங்களுடைய மனதில் தைரியம் அதிகரிக்கும். பெற்றோர், பெரியவர்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் செயல்பாடு மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையும். உங்கள் போட்டியாளர்கள் இன்று உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. தலைவலியாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் இனிமையான சூழல் அமையும். கிரகங்களின் தாக்கம் உங்களுடைய உற்சாகத்தை குறைக்க வாய்ப்பு உண்டு. இன்று எதிலும் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று, கல்வி விளையாட்டு துறையில் சிறப்பான சாதனை புரிய வாய்ப்பு உண்டு. புதிய வருமான வழிகள் உங்களுக்கு உருவாக்கும். உங்களுடைய பேச்சாற்றல் உங்களுக்கு பணியிடத்தில் கௌரவத்தையும், மரியாதையையும் பெற்றுத் தரும்.பருவநிலை மாற்றம் காரணமாக ஆரோக்கியத்தில் பாதகமான விளைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கை துணை இடம் இருந்து உங்களுக்கு போதுமான ஆதரவு, தோழமை கிடைக்கும். எங்கள் செய்யக்கூடிய பயணம், சுற்றுலா இனிமையானதாக இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்களுடைய நிதிநிலை வலுவடையும். இன்று உங்களுக்கு கௌரவம் மற்றும் செல்வம் சேரக்கூடியதாக இருக்கும். புகழ் அதிகரிக்கக்கூடிய நாள். நீங்கள் திட்டமிட்ட பணிகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் பேச்சு, செயல்பாட்டில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். இன்று வேடிக்கையான பயணங்கள் அல்லது சந்திப்புகள் அமையும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக முடிவுகள் எடுக்கவும். இன்று திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் நல்ல தகவலை தரும். வெற்றி பெற மன உறுதியுடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று, உங்களுடைய வீட்டின் தேவைகளுக்காக அதிக அளவில் செலவிடுவீர்கள். உலக இன்பங்களை அடைய நினைப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு கீழ் பணி புரிய கூடிய ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்லவும். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். இன்று இந்த விஷயங்களிலும் விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லை எனில் தேவையற்ற இடர்பாடுகளை சந்தித்து நேரிடும். எதிரிகளுடைய உங்களுக்கு எதிரான திட்டங்கள் தோல்வியடையும். உணர்ச்சிவசப்பட்டு இந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்களுடைய தொழில், வியாபாரம் தொடர்பாக லாபம் கிடைப்பது மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களுடைய நிதிநிலைமையும் முன்பை விட வலுவாக இருக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்க்க வெற்றி கிடைக்கும். உங்களுடைய குடும்ப பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகத் தளத்திற்கு செல்லும் பயண வாய்ப்பு உண்டு. இன்று வண்டி, வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்கவும். எதிர்பாராத வாகனப் பொழுது உங்களுடைய செலவுகளை அதிகரிக்கும். இன்று உங்களுடைய வருவாய் மற்றும் செலவு இடையே ஏற்ற இறக்கமான சூழலில் இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி சனியின் அமைப்பு உங்கள் நலனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது பரபரப்பான சூழலையும், செலவுகளையும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று புதிய சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பான முயற்சிகளில் கவனம் தேவை. இன்று கடன் கொடுப்பது தவிர்க்கலாம். நிதி விஷயங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். கவனமான திட்டமிடல் தேவை. உங்கள் வேலை தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும். முக்கியமான பணிகளை முடிப்பதில் சரியாக திட்டமிடுவது நல்லது.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் சுகமானதாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்படும் முன்னேற்றம் பெரிய அளவில் மகிழ்ச்சியை தரும். மாணவர்கள் படிப்பு தொடர்பான மன அழுத்தம் மற்றும் அறிவு சார்ந்த சுமைகளில் இருந்து விடுபடுவார்கள். உங்கள் உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு கிடைக்கும். பெற்றோரின் ஆலோசனைகள், ஆசீர்வாதம் உதவியாக இருக்கும். இன்று உங்களுடைய குழப்பம் மற்றும் தவறான புரிதல் உங்கள் வேலை வேகத்தை குறைக்க வாய்ப்பு உண்டு.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *