யாழில் பதின்ம வயது சிறுமி பலாத்காரம்-2 காதலர்கள்-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

யாழில் பதின்ம வயது சிறுமி பலாத்காரம்-2 காதலர்கள்-வெளியான திடுக்கிடும் தகவல்கள்

யாழில் 15 வயதுச் சிறுமிக்கு ஒரே நேரத்தில் 2 காதலர்கள்! ஒருவனுடன் ஓடிய பின் மருத்துவப் பரிசோதனையில் மாட்டுப்பட்டது எப்படி? மற்றைய காதலன் கைது!

ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பாலியல் வல்லுறவு க்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரிக்ரொக் மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவருடன், 15 வயதான சிறுமி ஓட்டம் பிடித்துள்ளார்.

நெல்லியடி பொலிசாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிசார் கைது செய்தனர்.

சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் அவருடன் முறையற்ற விதமாக நடக்கவில்லையென காதலன் தெரிவித்துள்ளார்.

எனினும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கிய போது, அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, தனது பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான முன்னாள் காதலனால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதான முன்னாள், இன்னாள் காதலர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *