கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

டித்வா” சூறாவளியினால் பாதிக்கப்பட்டு, பதுளை பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த ஒரு வீட்டிற்கு தலா 50 இலட்சம் ரூபாயும், பகுதியளவில் சேதமடைந்த ஒரு வீட்டிற்கு மதிப்பீடுகள் ஏதுமின்றி வழங்கப்படும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையான 5 இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

இதற்கான முதற்கட்ட காசோலைகள் வழங்கும் பணி நேற்று (27) நடைபெற்றது.

இதேவேளை, “டித்வா” சூறாவளியினால் பாதிக்கப்பட்டு பதுளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 23 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவிக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஊவா மாகாண சபையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *