மற்றுமொரு விபத்து-இளைஞன் பலி

மற்றுமொரு விபத்து-இளைஞன் பலி

சியம்பலாண்டுவ – எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ, ஐந்தாம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *