எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்
சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமான பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள     தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜூன் மாத விநியோகத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 10.42 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, ஒரு பீப்பாய் 89.03 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. அதேவேளை, மே மாத விநியோகத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயின் விலை 11.11 சதவீதத்தால் சரிவடைந்து, ஒரு பீப்பாய் 84.17 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
முக்கியமான இக்கடல்வழிப் பாதை மீண்டும் முழுமையாகச் செயற்படத் தொடங்கியுள்ளமை சந்தை நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளதுடன், சமீபத்திய தளம்பல் நிலையின் பின்னர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை இது சீர்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *