யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் பொலிஸாரைக் கண்டதும், தனது உடைமையிலிருந்த வாளொன்றைக் கிணற்றுக்குள் வீசிய இளைஞரிடமிருந்து அதனைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அனலைதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது பொலிஸாரைக் கண்ட இளைஞர், வீட்டிலிருந்த வாளொன்றைக் கிணற்றுக்குள் வீசியுள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸார், குறித்த இளைஞரைக் கைது செய்ததுடன், அவரைக் கிணற்றுக்குள் இறக்கி வாளையும் மீட்டுள்ளனர்.
மேலும், வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மற்றுமொரு வாளும் இரண்டு முகமூடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞரையும், மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் இரண்டு முகமூடிகளையும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
