காதல் துணையைத் தேட இலவச வெளிநாட்டுப் பயணம்! இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!

பின்லாந்தின் உத்தியோகபூர்வ சுற்றுலா சபையான ‘Visit Finland’, உலகம் முழுவதும் உள்ள தனிமையில் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்காக அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய விசேட சுற்றுலாத் திட்டமொன்றை அறிவித்துள்ளது.

‘Finnish Dinner Date’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், தெரிவு செய்யப்படும் 16 பேருக்கும் இலவச விமானப் பயணச்சீட்டு, தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான செலவுகள் வழங்கப்படவுள்ளன.

2027 பெப்ரவரி 9 முதல் 19ஆம் திகதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தச் சுற்றுலா, ஹெல்சின்கி மற்றும் டாம்பேரே ஆகிய நகரங்களில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, பின்லாந்தின் உணவுக் கலாசாரத்தை அனுபவிப்பதுடன், அந்நாட்டைச் சேர்ந்த உள்ளூர் நபர்களுடன் இணைந்து விசேட இரவு விருந்துகளில் கலந்துகொண்டு புதிய உறவுகளை உருவாக்கவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

பின்லாந்தில் வசிக்காத, 18 வயதுக்கு மேற்பட்ட உலகின் எந்தவொரு நாட்டைச் சேர்ந்த தனிநபரும், இலங்கையர்கள் உட்பட, இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment