வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள "முரசு" (Murasu) சூறாவளி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில மணிநேரங்களில் தீவிர சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூறாவளி இன்று நள்ளிரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடையில் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – நர்சாபூர் இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடாவின் குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கும், மன்னார் முதல் திருகோணமலை வரையான கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)