தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள், அரச சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீண்டகால விசாரணைகளைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள நிஷாந்த ரணதுங்கவிடம் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைமையகத்தில் வைத்து மேலதிக விசாரணைகளும் வாக்குமூலப் பதிவுகளும் இடம்பெற்று வருகின்றன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
