திருமணமான 4 நாட்களில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!

 

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் திருமணமாகி நான்கு நாட்களே ஆன புதுப்பெண் ஒருவர், சுமார் 18 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட 22 வயதுடைய பெண், நவம்பர் 4ஆம் திகதி கணவர் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார்.

இதன்போது, வீட்டிலிருந்த சுமார் 16 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன், 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மணமகன் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், காணாமல் போன பெண்ணைத் தேடி வருகின்றனர்.

Post a Comment