மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தப் பகுதி!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (10) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.

நவம்பர் 13ஆம் திகதியளவில் குறித்த கடற்பகுதியை அண்மித்து குறைந்த காற்றழுத்தப் பகுதியொன்று உருவாகக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment