யாழ்ப்பாணம் – கந்தரோடை பௌத்த தொல்லியல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்துள்ளார்.
தனக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் பா. சுரேஸ்குமாரும் அவருடன் சென்று குறித்த பகுதியைப் பார்வையிட்டுள்ளார்.
