மலையகத்தில் பிரதான நகரங்களில் ஒன்றான ஹட்டன் நகரில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு நேற்று (02) லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றுள்ளது.
பொதுமக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர். ஆயினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
எனினும் எரிவாயு நிறுவனத்தால் நேற்று வழங்கப்பட்ட நூறிற்கும் குறைவான சிலிண்டர்களே கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக விற்பனையாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
