சப்புகஸ்கந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பெண்ணொருவருடன் சென்ற முச்சக்கரவண்டி சாரதி, ஹோட்டல் அறையிலேயே திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது அவருடன் ஹோட்டலுக்கு வந்த பெண், அங்கிருந்து வெளியேறித் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதிக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் முறையற்ற தொடர்பு இருந்ததாக சப்புகஸ்கந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இருவரும் இணைந்து ஹோட்டல் அறையொன்றை முன்பதிவு செய்து அங்கு தங்கியுள்ளனர். இதன்போது முச்சக்கரவண்டி சாரதி திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண் அறையிலிருந்து வெளியே வந்து, தன்னுடன் வந்த நபர் மயக்கமடைந்த நிலையில் படுக்கையில் இருப்பதாக ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
நிலைமையை உணர்ந்த ஹோட்டல் ஊழியர் உடனடியாகச் செயற்பட்டு, 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட நபரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர் குறித்த பெண்ணிடம் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குச் சம்பவம் குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சம்பவத்தின்போது ஹோட்டலை விட்டு வெளியேறிய பெண் தொடர்பிலும், முச்சக்கரவண்டி சாரதியின் மரணத்திற்கான காரணம் குறித்தும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
