இலங்கையில் உயிருடன் வாழும் மிக வயதான ஆணாகக் கருதப்படும் கரந்தெனிய, அங்குலுகல்ல பகுதியைச் சேர்ந்த பி.எச். மெனியல் தனது 111ஆவது வயதை எட்டியுள்ளார்.
1915ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி பிறந்த இவர், 111 வயதிலும் சிறந்த நினைவாற்றலுடனும் மனத்தெளிவுடனும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாக முதியோர் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
ஒன்பது பிள்ளைகளின் தந்தையான இவருக்கு ஐந்து மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். மூத்த பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய எட்டுப் பிள்ளைகளும் உயிருடன் ஆரோக்கியமாக உள்ளனர். மேலும், அவருக்கு 92 பேரக்குழந்தைகளும் 12 கொள்ளுப்பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
குடும்பத்தினரின் அன்பான பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அவரைக் கௌரவிக்கும் வகையில், முதியோர் தேசிய செயலகம் மற்றும் கரந்தெனிய பிரதேச செயலக அதிகாரிகள் நேற்று முன்தினம் (03) அவரது இல்லத்துக்குச் சென்று கௌரவித்துள்ளனர்.
