கடும் மழைக்கு மத்தியில் கடைக்குள் திருட முயற்சி! கையும் களவுமாக சிக்கிய நபர்

 

கம்பளை – கண்டி பிரதான வீதியில் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள வியாபார நிலையமொன்றின் கூரை மீது ஏறி, நள்ளிரவில் திருட முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடைக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் விழிப்படைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார், பொதுமக்களுடன் இணைந்து குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment