சீரற்ற வானிலையால் உயிரிழப்பு; மூவர் மாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 19 மாவட்டங்களைச் சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்தும், மூவர் காணாமல் போயும் உள்ளனர்.

மேலும், 8 வீடுகள் முழுமையாகவும், 767 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 10,051 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 6,900 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment