எரிபொருள் பிரச்சனைக்கு அரசாங்கத்தின் அதிரடி தீர்வு

 




நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக மேலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணா திலக தெரிவித்துள்ளார்.


இலங்கை  பெற்றோலிய  கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை இவ்வாறு ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அனுர கருணா திலக இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

"தனியார் விநியோகஸ்தர்களிடம் இருந்து பாரிய முறைப்பா டொன்று இருந்தது.

இந்த இழப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது என்றனர்.

இதனால் அவர்கள் சந்தைக்கு எரிபொருள் விநியோகத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுப்படுத்தினர்.

இருப்பினும், நாங்கள் மறுபுறம் எண்ணெய் கூட்டுத்தாபனம் என்ற வகையில், சந்தைக்கு விநியோகிக்கும் அளவை முன்னரை விட அதிகரித்து,

குறிப்பாக 55% ஆக இருந்ததை 80% வரை உயர்த்தி, நுகர்வோருக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க நடவடிக்கை எடுத்தோம்.

எவ்வாறாயினும், தனியார் விநியோகஸ்தர்களின் பிரச்சினையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நெருக்கடி காலம் தணிந்ததன் பின்னர் அவர்களுக்கு நியாயமான லாபத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதுவரை பொறுமையுடன் செயற்படுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், இதனால் ஏற்படும் சிக்கல்களைக் குறைத்துக் கொள்வதற்காக, சில பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத்திரமே செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை உருவாக்குவதன் ஊடாக இவ்வாறான நெருக்கடி நிலைமைகளின் போது எரிபொருள் நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல்களைக் குறைந்தளவில் எதிர்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என எதிர்பார்க்கிறோம் ஏன்றார் 



Post a Comment