வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவை அழைத்து வருவதற்காக கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று (11) அதிகாலை தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்துள்ளது.
ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜக்க பங்குவ பகுதிக்கு அருகில் உள்ள 144 ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடக்கும்போது பேருந்தில் ஓட்டுநரும் உதவியாளரும் மட்டுமே இருந்ததாகவும், அவர்கள் இருவரும் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு வருகை தரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவவிபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
