மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், தாழ்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அப்பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
