ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஞானசார தேரரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD) அதிகாரிகளால் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Post a Comment