நாளை (05) பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, நாட்டின் பல பகுதிகளுக்கு அம்பர் நிலை வெப்பமான காலநிலை தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
