யாழ். கிளிநொச்சி வீதியில் விபத்து - வயோதிபப் பெண் விபத்து

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பிரதான வீதியின் புதுக்காடு பகுதியில், வீதியைக் கடந்து சென்ற மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதியதில் 68 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளதாகப் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, வீதியைக் கடந்து சென்ற மாட்டுடன் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த மூதாட்டியும் பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இருவரும் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment