செம்மணி விவகாரத்தை மூடி மறைக்கக் கூடாது! – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்

செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் ஊகங்களின் அடிப்படையில் கருத்துகளை வெளியிட்டு, விசாரணைகளின் முக்கியத்துவத்தைத் திசைதிருப்பும் சூழலை உருவாக்கக் கூடாது என ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட காலப்பகுதி உள்ளிட்ட விடயங்கள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டதைப் போன்ற நிலை செம்மணி விவகாரத்திலும் ஏற்படக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விவகாரத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Post a Comment