3 ஆண்டுகளாகக் கடிதங்களை விநியோகிக்காத தபால் ஊழியர் கைது!

பண்டாரவளை, ஹல்துமுல்ல – சொரகுண பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்குச் சேர வேண்டிய தபால் கடிதங்களை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விநியோகிக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தபால் கடிதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் தபால் கடிதங்களை உரியவர்களிடம் விநியோகிக்காமல் வைத்திருந்தமை குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரைப் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment