துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாரை நேரில் சந்தித்து அவரது அசாதாரணமான துணிச்சலைப் பாராட்டினார்.
நடுவானில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான போதிலும் 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாரை மருத்துவமனையில் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் நேரில் சந்தித்தார்.
இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மனித உயிர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, மிக உயர்ந்த அளவிலான தைரியத்தையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்திய விமானி ஸ்மிட் மச்சார்.
முழுமையான பாராட்டுதல்களும் அங்கீகாரமும் அவருக்கு உரித்தானது. அவர் எங்கள் நாட்டின் வரலாற்றின் ஒரு அங்கமாகத் திகழ்கிறார். கருணை, அமைதி மற்றும் உயிரைப் போற்றும் நாடாக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இவ்வாறு துபாய் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார்.சவுதி அரேபியாவில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், ஸ்மிட் மச்சார் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
