இலங்கைக் கடலில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது! படகு பறிமுதல்


இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை (SLN) தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடல் எல்லைக் கோட்டைப் (IMBL) தாண்டி, நெடுந்தீவுத் தெற்குப் பகுதியில் பெருமளவிலான இந்தியப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

நேற்று (03) மாலை மேற்கொள்ளப்பட்ட இந்தச் விசேட நடவடிக்கையின் போது, 'SLNS சமுத்ரா' கப்பலினால் குறித்த இந்தியப் படகு கைப்பற்றப்பட்டதோடு, அதில் இருந்த 09 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் கைப்பற்றப்பட்ட படகும் காங்கேசன்துறை (KKS) துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் (DFAR) ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Post a Comment