சில நிமிடங்களில் நடந்த உயிர் போராட்டம்!

 

கேரளாவின் கண்ணூர், செறுபழச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருமண விழா மகிழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 11 வயது சிறுவனின் தொண்டையில் மிட்டாய் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சிறுவன் மூச்சுவிட முடியாமல் துடித்துக் கொண்டிருந்த நிலையில், சுற்றியிருந்தவர்கள் என்ன செய்வது என்று பதற்றமடைந்தனர்.

அந்த நேரத்தில், எந்தவித பதற்றமும் இல்லாமல் சிறுவனிடம் ஓடிச் சென்றார் ஆஷா பணியாளரான சுஜாதா இ.வி.

தனக்கு வழங்கப்பட்டிருந்த முதலுதவி பயிற்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திய சுஜாதா, உடனடியாக தேவையான முதலுதவியைச் செய்தார்.

அதன் மூலம் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த மிட்டாய் வெளியேறியது. சிறுவன் மீண்டும் மூச்சுவிடத் தொடங்கியதுடன், அவரது உயிரும் காப்பாற்றப்பட்டது. 

ஒரு சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ற அச்சத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

குட்டியாட்டூர் கிராம பஞ்சாயத்தின் கொய்யோட்டுமூலா வார்டில் ஆஷா பணியாளராக பணியாற்றி வரும் சுஜாதாவின் துணிச்சலான செயலை சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

இதையடுத்து, கிராம பஞ்சாயத்து தலைவர் நிஜிலேஷ் பரம்பன் தலைமையில் பஞ்சாயத்து நிர்வாகக் குழுவினர் சுஜாதாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 

அவசர நேரத்தில் சரியான முதலுதவி அறிவு இருந்தால், ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை சுஜாதாவின் செயல் நமக்கு உணர்த்துகிறது.

ஒரு திருமண மண்டபத்தில் ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய அந்த கரங்களுக்கு…

சுஜாதாவுக்கு ஒரு பெரிய சல்யூட்! 

முதலுதவி பற்றிய அறிவை அனைவரும் கற்றுக்கொள்வோம். அவசர நேரத்தில் அது ஒரு உயிரைக் காப்பாற்றக்கூடும்.

சுஜாதாவின் மனிதநேயச் செயலுக்கு உங்கள் பாராட்டை கமெண்டில் தெரிவியுங்கள்.

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்

Post a Comment