மருத்துவ மாணவர்கள் கொழும்பில் போராட்டம்! அரசாங்கத்துக்கு முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவினர், நேற்று (14) இரவு கொழும்பு கோட்டை, லோட்டஸ் வீதியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக மீளாய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிய நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ERPM பரீட்சை மோசடிகள் மூலம் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் ஊடாக மருத்துவப் பட்டங்களை விற்பனை செய்வதைக் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

அத்துடன், இலவசக் கல்வியைப் பாதிக்கும் வகையிலான தனியார்மயமாக்கல் கொள்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவில் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Post a Comment