பௌத்த சாசனத்தை சீரழிக்கும் அரசாங்கம்! – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் குற்றச்சாட்டு

 தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தைச் சீரழிக்கும் வகையிலும், தமிழ் டயஸ்போராவைத் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

ஞானசார தேரரை அநியாயமாகக் கைது செய்து, அவரது சீவரத்தை அகற்றியிருப்பது மிகவும் ஆபத்தான மற்றும் கண்டிக்கத்தக்க செயலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பௌத்த வினய விதிகளின்படியும் மகாநாயக்கர்களின் அனுமதியுடனும் மட்டுமே ஒரு துறவியின் சீவரம் தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மீதான லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள் எனச் சாடிய அவர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக விரைவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் எனக் எச்சரித்தார்.

Post a Comment