ஞானசார தேரர் சாதாரண ஆடையில் நீதிமன்றுக்கு அழைப்பு! சட்டத்தரணி கடும் எதிர்ப்பு

வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் காவி ஆடையின்றிச் சாதாரண ஆடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமைக்குச் சமூகத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டத்தரணி தாரக நாநாயக்கார, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது புத்த சாசனத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது என வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலை நிலையான உத்தரவுகளின் (Standing Orders) 500ஆவது விதியின்படி, கைதி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது நாகரீகமான ஆடையிலேயே ஆஜர்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதனடிப்படையில் உபசம்பதா பெற்ற ஒரு துறவியைக் காவி ஆடையுடன் ஆஜர்படுத்துவதே சட்டத்தின் சாராம்சமாகும் எனக் கூறிய அவர், அரசின் இந்தச் செயலால் நியாயமான மக்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்!

Post a Comment