மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.
இந்தநிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று லக்னோவில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களம் இறங்கியது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.1 ஓவரில் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தநிலையில் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
