இலங்கையில் இதுவரை நிலவி வந்ததாகக் கூறப்படும் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, ‘ஜனநாயகத்திற்கான சிவில் அமைப்புகளின் பேரவை’யின் அழைப்பாளர் சமீர பெரேராதெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசியல் உயரடுக்கினரை சட்டத்தின் முன் கொண்டுவர முடியாது என்ற நிலைப்பாடு தற்போது மாறியுள்ளதாகக் கூறினார்.
ஷிராந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை, இந்த மாற்றத்திற்கு முக்கிய எடுத்துக்காட்டு எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் பாதுகாத்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர், இனிவரும் காலங்களில் ஊழல், மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.
இவை சமீர பெரேரா முன்வைத்த கருத்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.
