அதிர்ந்தது பொலநறுவை - சுற்றிவளைத்த பொலிஸார்




ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 14 பேரை ஹிங்குராக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 14 பேரை ஹிங்குராக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹிங்குராக்கடை பொலிஸ் தலைமையகம் மற்றும் ஹிங்குராக்கடை இலங்கை விமானப்படை தள அதிகாரிகள் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட விசேட கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒன்பது பேர் மின்னேரியாவையும், மூவர் ஹிங்குராக்கடையையும், இருவர் மெதிரிகிரியாவையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹிங்குராக்கடை 6 ஆம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர், வாட்ஸ்அப் (றூயவளயுpp) மூலம் வாடிக்கையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஹெரோயின் விநியோகிக்கும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை நடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் இன்றைய தினம் (03) ஹிங்குராக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


Post a Comment