வடமேல், மத்திய, சபரகமுவ, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'அம்பர்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (03) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.
இதற்கமைய, குறிப்பிட்ட வடமேல், மத்திய, சபரகமுவ, ஊவா, மேல், தென், வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் இடிமுழக்கத்துடன் கூடிய பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.
இடிமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களையும் பாதிப்புகளையும் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
