அரசாங்கத்திற்கு சொந்தமாகப்போகும் ”அடா” வின் சொத்துக்கள்



போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டுளு;ள பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படும், ரூ. 44.5 மில்லியன் பெறுமதியான நிலப்பரப்பு மற்றும் இரண்டு மாடி வீடு உள்ளிட்ட சொத்துகளை முடக்குவதற்கு இலங்கை பொலிஸின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில், எதிர்வரும் 14 வேலை நாட்களுக்கு குறித்த சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரணசிங்க ஆரச்சிகே சமன் குமார் (அல்லது 'அடா' என அழைக்கப்படுபவர்) மற்றும் அவரது மனைவியான தோட்டவத்த படகே சங்கீதா பிரியதர்ஷனி ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

பஹல கட்டுநேரிய பகுதியில் 9.5 மில்லியன் ரூபா செலவில் சங்கீதா பிரியதர்ஷனியின் பெயரில் 24.80 பேர்ச்சஸ் காணி வாங்கப்பட்டு, பின்னர் அதே இடத்தில் சுமார் 35 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடி வீடு கட்டப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 2026 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டவாறு 7(1) பிரிவுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான மேலதிக பரிவர்த்தனைகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment