பற்றியெரிந்த முச்சக்கர வண்டி



பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாத்தறை, தெலிஜ்ஜவில கம்பசபா சந்திக்கு அருகில் நேற்று (02) இரவு 8.25 மணியளவில் இந்த விபத்து; ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மின்சாரக் கசிவு காரணமாகவே இத்தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த விபத்தில் எவருக்கு தீக்காயங்கள் ஏற்படவில்லை என பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment