தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு வலியுறுத்தியும் நல்லூரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கான மகஜர் வாசிக்கப்பட்டதுடன், பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு சென்று குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
