நீர்கொழும்பு ஓசியன்; பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு, அங்கு விரிவுரைக்காக வருகை தரும் விரிவுரையாளர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை எவ்வித உடலியல் அல்லது உளவியல் பாதிப்புகளுமின்றி, சுதந்திரமாகத் தமது கல்வியைத் தொடர்வதற்கு நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் உரிமை உண்டு.
மாணவர்களின் அந்த உரிமையை முற்றிலும் மீறும் வகையில், இந்த விரிவுரையாளர் மாணவர்களை அராஜகமான முறையில் தாக்கி வருவதாக அங்கு கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்த தாய் தெரிவிக்கையில், 'எங்கள் மகன்கள் ஓசியன் பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்கிறார்கள்.
அங்குள்ள பிள்ளைகளை மிகக் கொடூரமாகத் தாக்குகிறார்கள்.
மாணவர்களின் பின்புறத்திலேயே பலமாகத் அடிக்கிறார்கள்.
துடைப்பக் கட்டைகள் உடையும் அளவுக்குத் தாக்குதல் நடத்தப்படுகிறது.
தண்டனையாக 'டண்ட்ஸ்' (னுipள) எடுக்க வைக்கிறார்கள்; குப்பைத் தொட்டிகளைத் தலையில் சுமந்தவாறு நடக்கவும் வைக்கிறார்கள்.
பிள்ளைகள் வீட்டிற்கு வந்தாலும் மல்லாந்த நிலையிலேயே கிடக்கிறார்கள்; உட்காரக் கூட முடியாத அளவுக்குக் கடுமையான வலியால் துடிக்கிறார்கள்.
எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆதங்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட தாயின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உண்மையில் இவ்வாறு கொடூரமாக நடத்தப்படுகிறார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் மாணவர்களைத் தரையில் அமருமாறு உத்தரவிட்டு, மற்றொரு மாணவனை 'டண்ட்ஸ்' எடுக்குமாறு கட்டாயப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.
விரிவுரையாளர் விதிக்கும் 'டண்ட்ஸ்' எண்ணிக்கையை முழுமையாகச் செய்ய முடியாத மாணவர்களுக்கு (சாட்டையடி) என்ற பெயரிலான தண்டனை வழங்கப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு தாக்கும்போது பயன்பாட்டில் இருக்கும் துடைப்பக் கட்டைகள் உடைந்து போவதோடு, மாணவர்களின் உடலில் கடுமையான காயங்கள் ஏற்படுவதையும் காண முடிந்தது.
அதுமட்டுமன்றி, வகுப்பறைக்குள் அடிவாங்க விரும்பாத மாணவர்களை, வகுப்பறைக்கு வெளியே முழங்காலிட்டு நிற்க வைக்குமாறும் அந்த விரிவுரையாளர் உத்தரவிட்டுள்ளார்.
இளம்பெண்களும் பயிலும் இவ்வாறான ஒரு சமுத்திரப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், பகிரங்கமாக மாணவர்களின் ஆளுமையைச் சிதைக்கும் வகையில் இவ்வாறு கொடூரத் தண்டனைகளை வழங்க முடியுமா?
காட்சிப் பூர்வமான சான்றுகளுடன் வெளிவந்துள்ள நீர்கொழும்பு ஓசியன்; பல்கலைக்கழகத்தின் இந்த அராஜகத்திற்கு எதிராக, உயர்மட்ட அதிகாரிகள் இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
